சிவகங்கை மாவட்டம் செட்டிகுறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கண்மாய் மீன்பிடித் திருவிழாவில் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர். செட்டிகுறிச்சி கிராமம் காஞ்சிராங் கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியதால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செட்டிகுறிச்சி, உத்தம்பட்டி, தர்மபட்டி, புதுப்பட்டி, புழுதிபட்டி, மணப்பட்டி, உழகூரணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். ஊத்தா, கச்சா, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை மக்கள் பிடித்த நிலையில், ஜிலேபி, கெண்டை, ரோகு உள்ளிட்ட மீன்கள் பிடிப்பட்டன.