கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலவர வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 30 இளம் சிறார்கள் விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. சிறார்களின் மின் அஞ்சல் முகவரிக்கு வழக்கு விபரங்களை அனுப்பி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.