தமிழ்நாட்டிற்குள் வேறு யாராவது நுழைந்து நம்மை பிரித்து விடாதவாறு திராவிட இயக்க கொள்கைகளை கைகளில் ஏந்தி அரணாக இருந்து போராட வேண்டுமென திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் நடத்தும் திராவிடப் பள்ளியின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், சிலர் சாதி, மதம், பிரிவினைவாத அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.