தூத்துக்குடியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 14ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான காங்கேயன் இலச்சினை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, போட்டிக்கான காங்கேயன் இலச்சினை அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட காங்கேயன் இலச்சினைக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.