தவெக தலைவர் விஜய், கடந்த காலத்தில் இளைஞரணி காங்கிரஸ் தலைவராக வருவதற்கு விருப்பப்பட்டு ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2026 தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றார். ஜனநாயக நாட்டில், எஸ்ஐஆர் என்பது தேவை, கண்டிப்பாக அனைவரும் எஸ்ஐஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களுடைய வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.