காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்காவின் 202-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்தில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், பல்லாக்கு உள்ளிட்ட ஊர்திகளில் கொடிகள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது.