செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சரவண பொய்கை குளத்தில் கந்தசாமி பெருமான் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.