திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, தங்கள் விரதத்தை தொடங்கினர். கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கியுள்ளவர்கள் கந்த சஷ்டி கவசம் பாடல் பாடியும் எழுதியும் விரதமிருந்தனர்.