திருத்தணி முருகன் கோவிலில் லட்சார்ச்சனையுடன் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் தொடங்கினர்.இதையும் படியுங்கள் : இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் கொ*ல