தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கஞ்சிமேடு காளியம்மன் கோயில் பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சந்தன காளியம்மன் மற்றும் பரிவார ஆலயங்களின் 21-ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தெய்வங்களுக்கு குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரப்பட்ட பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.இதையும் படியுங்கள் : அரசு புறம்போக்கு நிலத்தில் குழந்தைகளுடன் வசிக்கும் பெண் புறம்போக்கு நிலம் எனக்கே சொந்தம் - 108 ஆம்புலன்ஸ் ஊழியர்..!