மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மல்லிகை பூ சுமார் 400 ரூபாய் வரை விலை உயர்ந்து, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் ரோஜா 200 ரூபாய்க்கும், செவ்வந்தி, சம்பங்கி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.