’வெள்ளையனே வெளியேறு’ போராட்ட காலத்தில் காமராஜர் ராணிப்பேட்டையில் தங்கிய இல்லத்தை, பழமை மாறாமல் புதுப்பித்த நிலையில் அதனை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கேயே ஒரு ஜோடிக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தையும் நடத்தி வைத்தார். 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காமராஜர், தியாகி கல்யாணராமன் ஆகியோர் ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் தங்கி, செயல்திட்டங்களை வகுத்துள்ளனர். தற்போது, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இல்லத்தினை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொது மக்கள் பார்வையிட ஏதுவாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, இல்லத்தையும் பார்வையிட்டார்.