திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை நேரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடாமல் பள்ளி முடிந்த பின் கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் வீடியோ எடுக்காதீர்கள் என கூறி அத்துமீறியுள்ளார்.இதையும் படியுங்கள் : கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்து... ரிவர்ஸ் எடுத்தபோது பின்பக்க சக்கரம் கால்வாயில் இறங்கியது