கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப் பாலத்தில் இருந்த காமராஜர் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தொட்டிப் பால நுழைவு வாயில் முன்பு எம்.எல்.ஏ. தாரகை கத்பட் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும், நாடார் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.