அரசியலில் நடிக்க தெரியாது என்று கமல்ஹாசன் கூறியதாக, நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து கூறினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், கமலஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என தான் கூறிய போது, தனக்கு சினிமாவில் ஓரளவுக்கு நடிக்க தெரியும் என்றும், அரசியலில் நடிக்க தெரியாது எனவும் கமல்ஹாசன் கூறியதாக தெரிவித்தார்.