மதுரை மாவட்டம் மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மங்கள இசை முழங்கிட, ராஜகோபுர கலசங்கள் புனிதநீரால் நன்னீராட்டப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : காப்புக்காடு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து... வளைவில் திரும்பியபோது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது