உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா! கோவிந்தா!! என பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர்.