நாமக்கல் அருகே உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கல்குவாரியை திடீரென வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் தொழிலாளர்கள் தப்பியோடிய நிலையில், கல் உடைக்கும் இயந்திரம் உள்பட21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொண்டமநாயக்கனபட்டியில் அனுமதி பெறாமல் கல்குவாரி இயங்கி வந்ததாக, வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.