தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற கல்கருட சேவையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வான கல்கருட சேவையின்போது, சீனிவாச பெருமாள் கல்கருட வாகனத்திலும், வஞ்சுலவள்ளி தாயார் அன்ன வாகனத்திலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தனர்.