மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலக்கால் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.