நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு விரதம் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த காளிப்பிறை கூரைக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. அதில் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின. காளிப்பிறை கொட்டகையில் தங்கி விரதம் இருந்து வந்த பக்தர்கள், இன்று நடைபெறும் தசரா திருவிழாவிற்காக குலசேகரப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்ற பின்னர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.