ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை திடீரென திறக்கப்பட்டதால் வனப்பகுதியில் உள்ள ஓடையினை கடக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வரட்டுப்பள்ளம் அணையில் உள்ள பழுதான ஷட்டரை சீரமைப்பதற்காக ஓடையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், காக்காயனூர் மலை கிராம மக்கள் அதனை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.