கச்சத்தீவு திருவிழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களுக்கு வரும் 16ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர்.