சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கபடி போட்டியில், 54 வயது வீரர் உயிரிழந்த நிகழ்வு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. பட்டமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொரட்டி அணிக்காக விளையாடிய புதுக்கோட்டையை சேர்ந்த சிவகணேஷ் என்ற 54 வயது வீரருக்கு, கபடி விளையாடிக் கொண்டிருந்த போது கையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மயங்கிய சிவகணேஷை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.