நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 65 ஆம் ஆண்டாக மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டியானது இளையவர் சடுகுடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. அரியாங்கவுண்டம்பட்டி பகுதியில் நடைபெற்ற இப்போட்டியை, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டில் மதுரை கஸ்டம்ஸ் அணி முதல் பரிசையும், சென்னை வருமானவரித்துறை அணி 2 ஆவது பரிசையும் தட்டி சென்றனர்.