தூத்துக்குடியில் நீதிபதி கார் முன்பு வாளுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரையன்ட் நகரை சேர்ந்த வினோத் குமார் என்ற இளைஞர், நீதிபதி கார் முன்பாக நின்று வாளுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.