கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 65 ஆயிரம் மக்கள் பயனடையும் வகையில் இந்த கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.