புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஜான்குமார் புதிய அமைச்சராக பதவியேற்றார். பாஜக தரப்பில் நியமனம் செய்யப்பட்ட 4 பேரும் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த சாய் சரவணக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதுவை காமராஜர் நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏவான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜான்குமாருக்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.