தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விண்பாஸ்ட் பேட்டரி கார் ஆலையில் வேலைக்கு ஆள் எடுப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.இந்த தகவலை நம்பி தூத்துக்குடி மட்டுமல்லாது சென்னை, மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் ஆலைக்கு தங்களது பயோடேட்டா உடன் சென்றுள்ளனர். அப்போது விண் பாஸ் நிறுவன அதிகாரிகள் சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவியுள்ளது என்று அவர்களிடம் கூறி வேலை வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர்களிடம் அவர்களின் பயோடேட்டாவை வாங்கி வைத்துக்கொண்டு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.