விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் ஜீயர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகை தந்த அவரை பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றவர்கள், கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர், திடீரென அவரை வெளியே நிற்குமாறு கூறியதால், கருவறை படிக்கட்டில் நின்று சுவாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றார்.