கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக, 600 சவரன் நகைகள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மணப்புரம் கோல்ட் லோன் நிதி நிறுவனத்தால் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு சவரன் நகைக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் பங்கு தொகை கிடக்கும் என கூறி பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்களிடம் சுமார் 1022 சவரன் நகைகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.ஒரு வருடத்திற்கு பிறகு பங்குத்தொகை வழங்கப்படாததால் பொதுமக்கள் புகார் அளித்தனர்.இது தொடர்பாக 600 சவரன் நகைகள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நகைகளுக்கு உரிய ஆதாரம் கொடுத்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.