திருநெல்வேலியில் இருவேறு பகுதிகளில் இரண்டு மூதாட்டிகளிடம் நடந்த நகைபறிப்பு சம்பவத்தில் ஒருவனை கைது செய்த போலீசார் மற்றொருவனை தேடி வருகின்றனர். பரப்பாடி அருகே தெற்கு கழுவூர் கிராமத்தை சேர்ந்த சித்திரைகனி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை அரிவாளால் தாக்கி கவரிங் செயினை பறித்து சென்ற வைரமுத்து என்பவர் சிசிடிவி பதிவால் சிக்கினார். ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 95 வயது மூதாட்டி பொன்னம்மாள் என்பவரின் காதை பிளேடால் அறுத்து நகையை திருடியவனை போலீசார் தேடி வருகின்றனர்.