பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றியவர் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியின் நகை மதிப்பீட்டாளராக இருந்த சுவாமிநாதன் உடல்நிலை காரணமாக விடுமுறையில் இருந்ததால் வேறு ஒருவர் பணியமர்த்தப்பட்டார். அப்போது, ஒரு லட்சம் ரூபாய் நகை கடனுக்கு வட்டி கட்ட வந்த வாடிக்கையாளரிடம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு வட்டி கட்ட வேண்டும் என கூறியதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நகையை அடகு வைக்கும் போது சுவாமிநாதன் வாடிக்கையாளர் கேட்கும் தொகையை விட கூடுதல் தொகைக்கு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.