திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் வீட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த உறவினரை போலீஸார் கைது செய்தனர். முஹமத்புறா முதல் தெருவில் வசிக்கும் முபாரக் பாஷா மனைவி சுல்தானாவின் தங்கை கணவர் தன்வீர் அகமது, பர்தா அணிந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி 40 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார்.