கோடை காலம் வந்தாச்சு. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மார்ச் தொடக்கத்திலிருந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் ஏப்ரல், மே வெயிலை நினைத்தாலே மக்கல் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்க சுற்றுலா பயணிகள் மலை பிரதேசங்களுக்கு படையெடுத்துவருகின்றனர். அந்த வகையில் பிரபல சுற்றுலா தலமாக திகழும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக மலை சாலைகளின் இரு புறமும் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்கி உள்ளதால் இவை சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கின்றது. இதனை கண்டு ரசித்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களில் இள நீல நிறத்தில் மலர்ந்த இந்த ஜெகரண்டா மலர்கள், கண்களைக் கவரும் காட்சியாக அமைந்துள்ளன.. கோடை காலத்தில் நீல நிறத்தில் மலையின் இரு பக்கங்களிலும் பூத்து குலுங்கும் மலர்களால் ஏற்காட்டின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு கூடியுள்ளது.