தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடன்குடி - குலசேகரப்பட்டினம் சாலையில் லாரியை திருப்பி கொண்டிருந்த போது, வேகமாக வந்த ஜீப் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.