ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63ஆவது குருபூஜையை முன்னிட்டு ஏராளமானோர் பால்குடம் சுமந்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில் 36ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சிறுமிகளின் பூத்தட்டு ஊர்வலம் முன் செல்ல, பின் பால்குடங்களை பெண்கள் சுமந்து சென்றனர்.இதையும் படியுங்கள் : பருவமழையின் தீவிரத்தை பொருத்து மருத்துவ முகாம்கள்