கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை தள்ளிவிட்ட விவகாரத்தில் தலைமை காவலரின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி தனது பேரன் படையப்பாவுடன் உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு வந்த அவர்களது உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது படையப்பா உறவினர் பெண்களை தாக்கிய போது, அதனை தலைமை காவலர் ஜெயச்சந்திரன் தடுக்க முயன்றார். அப்போது மூதாட்டியை வெளியேறும் படி தள்ளியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்ததால் சஸ்பெண்ட் ஆர்டர் ரத்து செய்யப்பட்டது.