திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவபட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக டோக்கன் வாங்க மாடுபிடி வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொசவபட்டியில் , வரும் 7 ஆம் தேதி அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கு வழங்கிய டோக்கனை பெறுவதில் மாடுபிடிவீரர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்தனர்.