மதுரை அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில், நடைபெற்ற இப்போட்டியை, அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 8:30 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணியுடன் நிறைவுபெற்ற போட்டியில், 650 காளைகளும், 450 வீரர்களும் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் டிவி, பிரிட்ஜ், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.