மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவதல் அரங்கத்தில், மூன்றாவது முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், தீரத்துடன் அடக்கியதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.