திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் விழாவை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு வாடிவாசல் மற்றும் கேலரி அமைப்பதற்கு பெரிய அளவில் செலவு ஆவதால் ஒரு நிரந்தரமான வாடிவாசல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரியுடன் கூடிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் - ஜல்லிகட்டு மைதானத்தை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தரப்பட்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு மைதானம் காட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் மாட்டுப் பொங்கல் அன்று வழக்கம்போல் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக அதன் முதல் நாளான இன்று புதிதாக கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானம் பணிகள் நிறைவடைந்தை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு திருச்சி கலெக்டர் சரவணன் தலைமை வைத்தார். தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் திருச்சி மாநிலங்களவை எம்பி சிவா ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக துணை முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து பேசியதாவது தமிழக துணை முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்துகோவில் காளைகள் திறந்துவிட்டு பேசியதாவது திராவிடர் மாடல் தமிழக முதல்வரின் சிறு விளையாட்டு மைதானம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இங்கு வந்து உள்ள அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பொங்கல் பண்டிகை குடும்பத்துடன் உற்றார் உறவினர்களோடும் கொண்டாடுவோம் நானும் தற்பொழுது இங்குள்ள உற்றார் உறவினருடன் கொண்டாட வந்துள்ளேன்.பொங்கல் திருநாளில் வீர விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தமிழர்களின் வீர விளையாட்டு உள்ளது. திருச்சிக்கு பெருமை மலைக்கோட்டை, காவிரி ஆறு என்றால் சூரியூர் ஜல்லிக்கட்டு ஒன்று ஆகும். சூர்யூர் ஜல்லிக்கட்டு தமிழக அளவில் பெருமை சேர்ப்பதாகும் இன்றைய நாள் ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் நாளா இந்த ஜல்லிக்கட்டு போட்டி சூரியூரில் முன்பு ஊருக்குள் நடந்தது மந்தையில் நடந்தது குளத்தில் நடந்தது. தற்பொழுது நிரந்தர அரங்கத்தில் நடக்க உள்ளது. நீங்கள் வைத்த கோரிக்கையை உங்களது சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலம் தமிழக முதல்வருக்கு கொண்டு சென்றதும் முதல்வர் ஓத்துக்கொண்டார். நானும் தமிழக முதல்வர் பல விளையாட்டு மைதானங்களுக்கு அடிக்கல் நாட்டியிருந்தாலும் இந்த விளையாட்டு மைதானம் தமிழருக்கு பெருமை சாற்றும் விழாவாக உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் ரூ 3 கோடி மதிப்பீட்டில் அடிகள் கடந்த பிப்ரவரி மாதம் தான் நாட்டியதாகவும் 10 மாதத்தில் இந்த பணி தற்போது முடிந்துபோட்டிக்கு தயாராகி உள்ளது. இந்த மைதானத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன் அரசு எப்படி செயல்பட்டு வருகிறது என்பதற்கு சிறு உதாரணம் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு இந்த பகுதியின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் 150 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரிங் ரோடு பணி தற்பொழுது முடிவடைந்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு முயற்சியால் பஞ்சபூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தமிழகமே இன்று போற்றுகிறது. நேருவும் மகேஷும் திருச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளனர், மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக சூரியூரில் தான் இந்த மைதானம் அரசு அமைத்துக் கொடுத்து உள்ளது. இனி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அரசே செய்து கொடுத்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை. சிவகங்கை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்ளும் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து இருப்பது திருச்சிக்கு மட்டும் பெருமை சேர்ப்பது அல்ல திருச்சி மண்டலத்திற்கு பயன்படும். திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவர தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் சூரியூரில் நான் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு விழாவை பார்ப்பேன் என்றார் மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கிய ஜல்லிக்கட்டு காளைக்கு சூரியூர் என பெயர் சூட்டினார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக மாடுகளை பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பாக வழங்கும் கார் சாவியை துணை முதல்வர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி இடம் வழங்கினார். அப்பொழுது ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் வரும் அடுத்த ஆண்டில் சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த விழாவில் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், பாலாஜி ஆர்டிஓ தவவலவன், திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, உட்பட அரசு அதிகாரிகளும் சூரியூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் 7 மணிக்கு பெரிய சூரியூர் நற்கடல் கூடிய கருப்பண்ணசாமி விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்குகிறது. திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன் டி ஆர் ஓ பாலாஜி ஆர் டி ஓ தவ வளவன் திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி உட்பட அரசு அதிகாரிகளும் சூரியூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாளை காலை வழக்கம் போல் 7 மணிக்கு பெரிய சூரியூர் நற்கடல் கூடிய கருப்பண்ணசாமி விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்குகிறது. இந்த போட்டியில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை கரூர் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 800 ஜல்லிக்கட்டு காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு தங்களது வீரத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சைக்கிள் டேபிள் சேர் தங்க காசு டிரெஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறுபரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டுபோட்டியில் அதிக காளையை அடைக்கும் வீரருக்கு முதல் பரிசாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் ரூ 5 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உள்பட 60 பேர் காயம்