தஞ்சை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மாதா கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வருகிறது. போட்டியினை வருவாய் கோட்டாட்சியர் நித்யா தொடங்கி வைத்தார். போட்டியில் 600 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர் இப்போட்டியில் தஞ்சை, திருச்சி, கோவை, புதுக்கோட்டை , திருவாரூர்,அரியலூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 8 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள்,மெத்தை, டைனிங் டேபிள்,சில்வர் பாத்திரம் பரிசாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது. முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். Related Link மதுபோதையில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த இளைஞர்கள்