தஞ்சை அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர். ரெட்டிபாளையம் பகுதியில் திரெளபதி அம்மன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.