அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேல மைக்கேல்பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புனித சந்தன மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் இப்போட்டியை, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா, வீரர்களை உறுதிமொழி ஏற்க வைத்தும், கொடியசைத்தும் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், கட்டில், பீரோ, சைக்கிள், தங்கநாணயம், டிவி உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.