திண்டுகல் மாவட்டம் புகையிலைப்பட்டி புனித சந்தியாகப்பர் மற்றும் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை , சிவகங்கை , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 786 காளைகள் மற்றும் 392 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, சைக்கிள், ஆட்டுக்குட்டி, அண்டா, வெள்ளி காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.