குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., கல்லுாரி அருகே, குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா, இன்று நடந்தது. கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் உள்ளிட்டோர் கோவில் காளைக்கு பூஜை செய்து, வாடிவாசல் வழியாக திறந்துவிட்டனர். அந்த காளையை யாரும் அடக்கவில்லை. அதன்பின், 500க்கும் மேற்பட்ட காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக, விழாக்குழு சார்பில் அவிழ்த்து விடப்பட்டன. இதில், காளைகள் வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்தும், காளையர்களை துாக்கி வீசியும், முட்டித்தள்ளியும் சீறிப்பாய்ந்து ஓடின. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், மாடுபிடி வீரர்களும், காளையின் திமிலை பிடித்து குறிப்பிட்ட துாரம் வரை ஓடி காளையை அடக்கி வெற்றி பெற்றனர். 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு குழுவாக களத்தில் இறக்கி விடப்பட்டு காளைகளை அடக்கினர். கால்நடை மருத்துவ குழுவினர் ஒவ்வொரு காளையையும் பரிசோதித்து போட்டியில் பங்கேற்க வைத்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும் பேன், மிக்சி, சைக்கிள், சில்வர் பாத்திரம், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்களை விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா , குமாரபாளையம் டி.எஸ்.பி., கௌதம் , குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். Related Link முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் மக்கள் வாக்குவாதம்