திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டியில் உள்ள புனித சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 775 காளைகளும் 316 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று களம் கண்டனர். இதில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்ட்ட நிலையில், காவலர்கள் உட்பட 34 பேர் காயமடைந்தனர்.