புதுக்கோட்டையில் சிறைக்கைதி பூச்சிக்கொல்லி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு கைதி மரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ கைதி ரமேஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மற்றொரு நோயாளி அருந்திய பூச்சிக்கொல்லி மருத்து அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை யாருக்கும் தெரியாமல் அவர் எடுத்து குடித்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிறையில் மற்றொரு கைதி மரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.