சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன், ராசு, அவரது மகன் தினேஷ், கல்குவாரி உரிமையாளர் ராமையா உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.